பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் - 37 என்று பாடுவதால் செந்தமிழர் வேறு, தெய்வ மறைநாவர் வேறோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அதே பதிகத்தில் இவர்கள் யாவரும் அர்ச்சனை செய்கின்றார்கள் என்று வருவதால் சாதி வேறுபாடு இல்லாமல் கோயிலினுள் சென்று தாமே அர்ச்சனை செய்தனர் என்று நினைக்க இடமுண்டு. இந்த அடிப்படையில் சிந்தித்தால் வேதியர் இனத் துள்ளும் மூன்று வகையினர் இருந்தனர் என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழகத்தில் பரம்பரையாக வாழ்ந்த வேதியர்கள், அந்தணர்கள் என்போர் ஒரு வகையினர். தெய்வமறை நாவர் என்று குறிக்கப் படுபவர் வடநாட்டிலிருந்து வந்த வேதியர் போலும், மூன்றாவதாக உள்ளவர்கள் திருக்கோயிலில் வழிபாடு செய்யும் சிவவேதியர் எனப்பட்டோர். இவர்களை அல்லாத வணிகர், வேளாளர் என்பவரிடையேயும் சிறுசிறு பிரிவுகள் இருந்தன. திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரை உடன் வைத்துக் கொண்டு, போகும் இடமெல்லாம் தம் பாடலுக்கு யாழ் வாசிக்கச் செய்தார் என்பதையும் பெரிய புராணம் சொல்கிறது. ரிக்வேதியாகிய ஞானசம்பந்தர், பாணரை உடன் வைத்துக்கொண்டதும், அருகிலேயே வைத்துக்கொண்டு யாழ் வாசிக்கச் சொன்னதும் திருக்கோயில்களினுள் அழைத்துச் சென்றதும் மாபெரும் புரட்சிகளாகும். அதே நேரத்தில் தாம் செய்து ஏற்றுக்கொண்ட இப்புரட்சியை மற்றவரிடம் திணிக்கவேண்டும் என்று ஞானசம்பந்தர் நினைக்க