பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சேக்கிழார் தந்த செல்வம் வில்லை. மற்றொரு ரிக்வேதியாகிய திருநீலநக்கர் வீட்டிற்குச் சென்றபொழுது மனைவியோடு உடன் வரும் யாழ்ப்பாணருக்கு இடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதில், தமிழ் ஞானசம்பந்தரின் தமிழ்ப் பண்பாடு வெளிப்படுகிறது. அன்றாடம் வீட்டில் வளர்க்கும் முத்தீயின் பக்கத்தில் பாணருக்குப் படுக்கை போட்டுக் கொடுத்த நீலநக்கர் தமிழ்ப் பண்பாட்டில் தலைநின்றவராகிறார். மயிலையில் வாழ்ந்த சிவநேசச் செட்டியார் தம் மகள் பூம்பாவையை ஞானசம்பந்தருக்கு மணமுடிக்க எண்ணி வளர்த்துவந்தார் என்றால், அது அந்நாளில் நடைபெறக்கூடிய ஒன்றாகவே இருந்திருத்தல் கூடும். சாதி வேறுபாடு காரணமாக ஒரு சாதியார் மற்றொரு சாதியில் திருமணம் முடிக்கும் பழக்கம் அங்கு இல்லை என்றால், சிவநேசச் செட்டியார் தம் பெண்ணை இக்கருத்துடன் வளர்த்தார் என்பது கேலிக் கூத்தாக முடியும். எனவே, 7ஆம், நூற்றாண்டில் ஒரு வழக்காக இல்லாவிடினும், இத்தகைய கலப்பு மணங்கள் அருகி நடந்தன என்று நினையவேண்டி உள்ளது. கலப்புத் திருமணம்பற்றி பேசவந்த சேக்கிழார், சிவவேதியர் குலத்தில் தோன்றிய நம்பி ஆரூராருக்கு நடந்த திருமணம்பற்றி விரிவாகப் பேசுகிறார். சிவவேதியர் வகுப்பினுள் பேசி முடிவு செய்யப்