பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 39 பெற்ற நம்பி ஆரூரர் திருமணம் தடைபட்டது. இறையருள் பெற்றுத் தம்பிரான் தோழனாக மாறி நம்பி ஆரூரர் திருவாரூருக்கு வந்தபொழுது பரவையார் என்ற பெண்ணை மணந்தார் என்று சேக்கிழார் கூறுகிறார். ஏதோ கர்ண பரம்பரைக் கதையைக் கேட்டு அதை நம்பி இக் கதையைச் சேக்கிழார் பாடவில்லை. சுந்தரருடைய தேவாரத்தில் இருபது இடங்கட்குமேல் தம் மணம் தடைப் பட்டதையும், பிறகு ஆரூரில் பரவையாரை மணந்ததையும் பாடிச் செல்கிறார். அகச் சான்று களை வைத்துக்கொண்டே சேக்கிழார் அதனைப் பாடுகிறார். சிவவேதியர் குலத்தில் ஒரு வருக்கு மணம் செய்யப்பெற்ற பரவையார் தோன்றியது கணிகையர் குலத்திலாம். பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்..” (பெ.பு. 278) என்பது சேக்கிழார் வாக்கு. சுந்தரர் இரண்டாவதாக மணம் செய்துகொண்டதும் வேளாளர் குலத்தில் தோன்றிய சங்கிலியாரையே ஆகும். ஏதோ 20ஆம், நூற்றாண்டில்தான் புரட்சி வீரர்கள் தோன்றிக் கலப்புத் திருமணத்தைப் புகுத்தி னார்கள் என்று கூறுவதும் நினைப்பதும் தமிழக வரலாற்றை அறியாதவர்கள் பேசும் பேச்சே ஆகும். திருவையாற்றை அடுத்துள்ள திங்களுரில் வாழ்ந்த அப்பூதி அடிகள் என்ற பெரியார்