பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 41 சகுனம் முதலியவற்றைப் பற்றி சகுனம் பார்த்தல், விரிச்சி கேட்டல் என்பவை இந்நாட்டில்மட்டு மல்லாமல் எந்நாட்டிலும், எல்லாக் காலத்திலும் இருந்துவந்த, வருகின்ற பழக்கமாகும். நாகரிகத்தின் உச்சிக் கிளையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியில் தலைநின்றவர்கள் என்பதாகவும் நம்மால் கருதப்பெறும் ஜப்பானியர் கள் அமெரிக்கர்கள் முதலியவர்கள்கூட இதிலிருந்து இன்றும் விடுபடவில்லை. பெருஞ்செல்வர்களும், பெருந்தொழில் அதிபர்களும்கூடச் சாலையில் செல் கையில் சாலையின் ஒரத்தில் இருக்கும் புத்த விகாரங்களில் தம் வண்டியை நிறத்தி அங்கு வைக்கப்பட்டிருக்கும் காகிதம் சுற்றப்பட்டுள்ள சிறு மூங்கில் குச்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு ஏதோவொரு குச்சியை எடுக்கின்றனர். அதில் சுற்றப் பட்டிருக்கும் காகிதத்தில் அதை எடுத்தவர்களின் தினப் பலன், மாதப் பலன் என்று எழுதப் பட்டிருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் ஒருவர் பிறந்த நாளில் சூரியன் இருந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு தினப் பலன், வாரப் பலன் என்பவற்றைக் கணிப்பொறிமூலம் பெறுவ்தை இன்னும் காணலாம். ஆகவே, இந்த நம்பிக்கையை அவ்வளவு எளிதாக யாரும் உதறிவிட முடியாது. இன்றுகூடப் பஞ்சாங்கத்தை எடுத்து அதன்