பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சேக்கிழார் தந்த செல்வம் பிற்பகுதியில் பார்ப்போமேயானால், ஒரு சில நட்சத்திரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த நட்ததிரங்களில் பாயில் படுத்தவர் எழுந்திரார், பயணம் போனவர் மீளார் என்று எழுதியிருப்பதைக் காணலாம். இந்த நம்பிக்கை இன்று நேற்றுத் தோன்றியதன்று. இந்தப் பஞ்சாங்கத்தில் குறிக்கப் பெற்ற நட்சத்திரங்கள் அஸ்வினி முதல் எண்ணி அவை எத்தனையாவது நட்சத்திரங்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் ஒன்றை அறியலாம். இந்த எண்ணிக்கையை 7ஆம், நூற்றாண்டில் தோன்றிய திருஞானசம்பந்தர் தாம் பாடிய கோளறு பதிகத்தில் குறிப்பிடுவதைக் கண்டால் வியப்படையாமல் இருக்க முடியாது. "என்பொடு கொம்பொடாமை” என்று தொடங்கும் இரண்டாவது பாடலில் ஒன்பது ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும் * L-6&TITLE I நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல என்று பாடுகிறார் (2–221–2). அதாவது ஆயில்யம் (9). மகம் (94.1 (10), விசாகம்(i) (947=l), கேட்டை(18), திருவாதிரைடு என்ற நட்சத்திரங்கள் தீமை பயப்பவை என்ற பரவலான நம்பிக்கையைச் சாடி, இறைவனை நம்புகிறவர்களுக்கு இவை தீயவை அல்ல, அதன் ヘ மறுதலையான நன்மையையே பயக்கும் - . . . என்று பாடியுள்ளார். அப்பதிகத்தின் இறுதிப் பாடலில் இதையும் மீறி நாள், கோள் என்று அஞ்சுகிறவர்களைப் பார்த்துப் பெருமான் பாடுகின்ற