பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 43 பின்வரும் பாடல் இச்சமுதாயத்தில் செய்த மாபெரும் புரட்சி ஆகும்.


மறைஞான ஞானமுனிவன் தானுறுகோளு நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. - (திருமுறை : 2, 221, 10 இந்த அருளாளர்கள் இறையருளால் தாங்கள் பெற்றுள்ள மாபெரும் சக்தியைக் கொண்டு கோள்கள், நட்சத்திரங்கள் என்பவற்றின் ஆற்றலை மாற்றக்கூடியவர்கள் என்பதை மேலே காட்டப் பட்டுள்ள பாடல் மூலம் அறிகிறோம். சேக்கிழாரின் தமிழ்ப் பற்று தமிழகத்தில் தமிழரிடையே மொழிப்பற்றுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், மாபெரும் கல்வியாளரும் வரலாற்றறிஞரும் ஆகிய சேக்கிழார், திருஞான சம்பந்தர் புராணத்தைப் பாடும்பொழுது 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகம் இருந்த நிலை நன்கு அறிந்து சொல்கிறார். தொடக்க காலப் பல்லவர்கள் தமிழர்கள் அல்லாதவர்களாகவும், தமிழ் மொழிமேல். ஈடுபாடு இல்லாதவர்களாகவும் இருந்ததுடன் வடமொழிமேல் ஈடுபாடு கொண்ட வர்களாகவும் வேதத்தில் சொல்லப்பட்ட யாகம்