பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சேக்கிழார் தந்த செல்வம் முதலியவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்க ளாகவும் இருந்தனர். இறைவழிபாடு, பக்தி மார்க்க அடிப்படை இல்லாமல், யாகம் முதலிய கிரியை களுக்கே அதிக முக்கியத்துவம் தந்தனர். இந்த இக்கட்டான நிலையில் தோன்றிய திருஞான சம்பந்தர் தமிழ் மொழியின் சிறப்பைக் கூறித் தமிழில் பாடும் பாடல்கள் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதை எடுத்துக்காட்டியதுடன் தமிழுக்கு அன்றுவரை இல்லாத மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தந்தார். தாம் பாடிய நானுறுக்கும் மேற்பட்ட பதிகங்களில் இரண்டு பதிகங்கள்தவிர, எஞ்சிய அனைத்துப் பதிகங்களிலும் இறுதிப் பாடலில், முத்திரை அடி என்று இக்காலத்தார் கூறும்வகையில், தம் பெயரைக் கூறியுள்ளார். அதில் ஒரு வியப்பு என்னவென்றால், ஏறத்தாழ இத்துணை இடங்களிலும் தம் பெயரைப் பதியும்போது தமிழ் ஞானசம்பந்தன், தமிழ் விரகன், முத்தமிழ் விரகன், சம்பந்தன. செந்தமிழ் என்பனபோலத் தமிழுடன் சேர்த்தே தம் பெயரைக் கூறியுள்ளார். இந்த துணுக்கத்தைப் புரிந்துகொண்ட சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராண்த்தில், "திச்ைஅனைத்தின் பெருமைளலாம் தென்திசையே . வென்றுஏற, மிசைஉலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல அசைவு இல் செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின் - s துறைவெல்ல,