பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 45 இசைமுழுதும் மெய்அறிவும் இடம்கொள்ளும் நிலைபெருக" (பெ. பு-1927) திருஞானசம்பந்தர் திரு அவதாரம் செய்தார் என்று கூறுகிறார். : . . இந்திய சரித்திர வரலாற்று அறிவும் இந்நாட்டின் பல்வேறு சமயங்களின் தோற்றம் வளர்ச்சி என்பவை பற்றிய அறிவும் ஒருசேரப் பயன்படுத்தினால் ஒழிய இப்பாடலின் பொருளைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியாது. ஏதோ உயர்வுநவிற்சி அணியாக ஒரு தமிழன் தன்னுடைய தமிழ்மொழியின் சிறப்பைப் பாடியுள்ளான் என்று கருதிவிட்டால், அது தவறாக முடிந்துவிடும். 7ஆம், நூற்றாண்டின் தொடக்கத்தில் வடமேற்குத் திசையில் தோன்றிய வைதிக சமயமும், வடகிழக்குத் திசையில் தோன்றிய பெளத்தம், சமணம், சாக்தம் என்ற கொள்கைகளும் தமிழகத்தில் ஊடுருவி நின்றன. ஆட்சியோ பல்லவருடையது; அவர்கள் போற்றிய மொழியோ வடமொழி; அவர்கள் பின்பற்றிய சமயமோ வைதிகம், சமணம் என்பவைகளாகும். இந்தச் சூழ்நிலையில் திருஞான சம்பந்தர் தோன்றித் தமிழ்மொழி ஆதிக்கத்தை நிலைநாட்டிச் சிவசம்பந்தம் உடைய சைவ சமயத்தை நிலை நாட்டினார். எனவே "திசை அனைத்தின் பெருமை எலாம் தென்திசையே வென்றுஏற’ என்று