பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சேக்கிழார் தந்த செல்வம் சேக்கிழார் பாடும்பொழுது அது வரலாற்று அடிப்படையில் பாடப்பட்ட ஒன்று என்பது தெளிவாகும். வைதிகம், பெளத்தம் முதலிய சமயங்கள்ால் நெருக்குண்ட சைவ சமயம், தான் பிறந்த தென்திசையிலேயே பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டது. காஷ்மீர்வரை பரவியிருந்த சைவ சமயத்தின் கதியே இது என்றால், தமிழ் நாட்டில் மட்டும் பரவியிருந்த தமிழ்மொழியின் கதிபற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்த இக்கட்டைச் சீர்காழியில் தோன்றிய பெருமகனார் தாம் ஒருவராகவே நின்று சைவத்தையும் தமிழையும் அவ்வவற்றிற்குரிய தலைமை இடத்தைத் தந்து பாது காத்தார் என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாற்று உண்மையை நன்கறிந்த சேக்கிழார் அதை வரலாற்று நிகழ்ச்சியாகச் சொல்லாமல் கவிஞனுக்கே உரிய முறையில் ஏனைய மூன்று திசைகளையும் தென் திசை வென்றது என்று கூறுகிறார் என்றால் யாக்ங்கள் செய்வதே போதுமானது என்ற வைதிகக் கொள்கையும் கடவுட் கொள்கையே இல்லாமல் தர்மங்களைமட்டும் வலியுறுத்திய பெளத்த, ஆருகதக் கொள்கைகளும் தென்திசையில் தோற்றன என்ற வரலாற்று நிகழ்ச்சியைத்தான் "திசை அனைத்தின் பெருமை எலாம் தென்திசையே வென்றுஏற' என்று பாடுகிறார். அடுத்து, அயல்வழக்கு என்று சேக்கிழார் கூறுவதும் இவற்றைச் சுட்டியே ஆகும். அவற்றைத்