பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சேக்கிழார் தந்த செல்வம் என்ற இந்த நூல் தோன்றிய விதமே சற்று புதுமையானதுதான். இரண்டாண்டுகட்கு முன்னர் சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சி பதிவு செய்ய வானொலி நிலையம் சென்றிருந்தேன். அன்றைய நிலைய இயக்குனர் திரு.விஜய திருவேங்கடம் அவர்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அண்மையில் இருந்த வானொலி நிலைய உதவி இயக்குனர் திருமதி. காலாரவியைப் பார்த்து 'உடனடியாக பெரியபுராணம் பற்றி பத்து பேச்சுக்கள் பேசுமாறு செய்து அதனை ஒலிப்பதிவு செய்யுங்கள்’ என்று கூறினார். சில மாதங்கள் கழித்து உதவி இயக்குனர் இதனைச் செய்யுமாறு அழைத்தார். - பெரியபுராணத்தைப் பற்றி, பெரியபுராணம் ஒர் ஆய்வு, தேசிய இலக்கியம் என்ற இரண்டு நூல்கள் முன்னரே என்னால் எழுதப் பெற்றுள்ளன. அவை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் இருந்து பெரியபுராணத்தில் ஆய்வு செய்து எழுதப் பெற்றவைகள் ஆகும். பெரிய புராணம் பற்றி மற்றொரு நூல் எழுதவேண்டும் என்ற சிந்தனை என் மனத்தில் தோன்றவேயில்லை. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த இராமன் பன்முக நோக்கில்’ என்ற நூலின் முகவுரையில் யாழ்ப்பாணத்து சித்தர் பெருமகனார் யோக சுவாமிகள் அவர்கள் எனக்கிட்ட