பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. சேக்கிழாரின் தனித்துவம்

திறவு கோல்கள் : இரண்டு பாடல்கள்

ஏனைய காப்பியப் புலவர்கட்கு வாய்த்தது போல், தனி ஒருவருடைய வரலாற்றைப் பாடும் வாய்ப்புச் சேக்கிழாருக்கு இல்லை. பலருடைய வரலாற்றைப் பாட வேண்டிய சூழ்நிலை இருந்தமையின் ‘தொண்டு’ என்ற ஒரு பண்பைக் காப்பியத்திற்குத் தலைமையாக வைக்கின்றார். அதன் பிறகு, தொண்டு பல வகைப்படும் ஆதலால், ஒவ்வொரு வகையான தொண்டை மேற்கொண்டவர்களுடைய வரலாறுகளை ஒன்றாக இணைக்கிறார். தனித் தனியாகப் பார்க்குமிடத்து, இவர்கள் செய்த பணிகள் பல வகைப்படுமேனும், அவை அனைத்தும் தொண்டு என்ற பொதுத் தலைப்பில் அடங்கி விடுவதைக் காணலாம். அவருடைய காப்பியத்தின் கட்டுக்கோப்பு இவ்வாறு அமைய வேண்டும் என்று முடிவு செய்தவுடன், பல்வேறு பணிகளைச் செய்த இந்த வரலாற்று நாயகர்களிடம் உள்ள பொதுத் தன்மையை எடுத்துக் கூற விரும்புகிறார். சுந்தரர் உள்ளிட்ட இவ் அடியார்கள் பொதுத் தன்மை பற்றி ஒரு கூட்டமாக வைத்துப் பேசப்படலாம் என்பதை அறிந்தார் சேக்கிழார். எனவே, இவர்களுடைய பொதுத் தன்மையைக் கூறும் பகுதிக்குத் “திருக்கூட்டச் சிறப்பு” என்று பெயரிட்டார். அதிலுள்ள பதினொரு