பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சேக்கிழார் தந்த செல்வம் பாடல்களில் இரண்டு பாடல்கள் மிக முக்கிய மானவை. சேக்கிழாரையும் பெரியபுராணத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த இரண்டு பாடல்களும் திறவுகோல்களாகும். அவை வருமாறு: கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்; (பெ. பு-143) ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார் ஈர அன்பினர், யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ ? (பெ. பு-144) இப்பாடல்களில் உலக மக்களிடை வாழ்ந்தும், தனித்துவம் பெற்று விளங்கும் இவர்கள் என்ன தனித்துவத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாகச் சொல்கிறார், சேக்கிழார். வறுமை கேடு), செல்வம் (ஆக்கம்) - இரண்டும் இல்லையேனும் மனநிறைவு, அமைதி என்பவற்றை நிறைவாகப் பெற்றுள்ள இவர்களைச் செல்வர்கள் (திருவினார்) - என்று கூறுகிறார், சேக்கிழார். இந்த மனநிலை எவ்வாறு வந்தது என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல