பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 51 அடுத்த அடியைப் பாடுகிறார். இது மண்ஒடு, இது செம்பொன் என்ற வேறுபாடு அவர்கள் மனத்தில் பதியாமையால் இரண்டையும் ஒன்றாகவே பார்க்கின்றார்கள் என்று கூறுகின்றார். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டு, பொன்னை மதியாமல் ஒதுக்கிவிடுகின்ற மனநிலை வேறு. சேக்கிழார் இங்கே சொல்லியது அதுவன்று. ஒக்கவே நோக்குவார்’ என்றதால்-இவை இரண்டிடையும் உள்ள வேறுபாடு அவர்கள் கண்ணிலும் மனத்திலும் படவேயில்லை என்று கூறுவதால் சமதிருஷ்டி என்று சொல்லப்படும் ஒரு மனநிலையை அடைந்துவிட்டவர்கள் என்பதை அறிவிக்கிறார். உலகத்தில் பிறந்து வாழும் இவர்கள் ஒட்டையும் செம்பொன்னையும் வேறுபாடு தெரியாமல் பார்க்கின்றார்கள் என்றால், இவர்கள் எந்த அடிப்படையில் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற வினாத் தோன்றும். பொன்னால் வரும் மகிழ்ச்சியும் வறுமையால் வரும் துன்பமும் இவர்கள் பால் இல்லையென்றால் வாழ்க்கையில் வேறு ஏதோ ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும், அதற்காகவே இவர்கள் வாழ்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தவுடன் அந்தக் குறிக்கோள் யாது என்று சேக்கிழார் கூறுகிறார். மோட்சம் என்று சொல்லப்படும் வீடுபேற்றைக்கூட வேண்டாம் என்று சொல்லும் நெஞ்சுரம் படைத்த இவர்கள் வாழ்க்கையின்