பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சேக்கிழார் தந்த செல்வம் குறிக்கோள் யாது? அது "கூடும் அன்பினில் கும்பிடுவதே" ஆகும். இவர்களைப் பொறுத்தவரை மானிடப்பிறவி துயரம் தருவதோ வெறுக்கத் தகுந்ததோ அன்று. இந்தப் பிறவி இருப்பதால்தான் கும்பிட முடிகிறது. ஏனையோர் இறைவனைக் கும்பிட்டு உலக இன்பங்களையும் வீடுபேற்றையும் பெற விரும்புவர். இக்கூட்டத்தார் கும்பிடுவதற்குப் பயனாக வீடுபேற்றைக்கூட விரும்பு வதில்லை. கும்பிடுவதன் பயன், இன்னும் கும்பிடுவதே ஆகும். இந்த ஒரு பாடலின்மூலம் இத்திருக் கூட்டத்தினர் நம்மிடையே வாழ்ந்தாலும் நம்மிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பதைக் கூறி விட்டார், சேக்கிழார். அப்படியானால் இவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு? அதற்கு விட்ையாகத்தான், அடுத்த பாடலைக் கூறுகிறார். இத் திருக்கூட்டத்தாரை அடையாளம் கண்டுகொள்ள இரண்டு நிலைகளைக் கூறுகிறார் சேக்கிழார். இவர்களுடைய புறத்தோற்றம் எளிமையானது. கழுத்தில் அக்கமணி மாலை, இடுப்பில் ஒரு கந்தை: இது புறத்தோற்றம். இனி அவர்களுடைய உள்ளத்தில் புகுந்து பார்த்தால் ஈர அன்பு நிறைந்திருப்பதைக் காணலாம். இந்த அன்பு இறைவன்மாட்டும், அவன் படைப்புகளாகிய உயிர்கள்மாட்டும் செலுத்தப்படுவ தாகும். உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஈர அன்பு எப்படி வெளிப்படுகின்றது தெரியுமா? ஈசன் பணி