பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 53 செய்வது தவிர, வேறு ஒன்றையும் இவர்கள் செய்வது இல்லை. ஈசன் பணி என்ற தொடர் ஈசனுக்குப் பணி என்றும், ஈசனால் இடப்பட்ட பணி என்றும் விரியும். ஈசனுக்குப் பணி என்று நான்காம் வேற்றுமை விரியும்பொழுது திருக்கோயிலுக்குச் செய்யும் பணியைக் குறிக்கும். திருக்கோயில் பணி என்று கூறியவுடன் மக்கள் தொடர்பில்லாப் பணி என்று நினைத்துவிட வேண்டா. மக்கள் பலரும் கூடுகின்ற இடம் திருக்கோயில் ஆதலால் அங்குச் செய்யும் பணி மறைமுகமாக மக்களுக்குச் செய்யும் பணியாகவே முடிகிறது. ‘. . . இனி, ஈசனால் இடப்பட்ட பணி என்று மூன்றாம் வேற்றுமை விரியும்பொழுது அது நேரிடையாக மக்களுக்குச் செய்யும் பணி என்று விரிகிறது. இம் மக்கட்பணியை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை "அத்தர் வேண்டி’ (பெ.பு-140) என்று தொடங்கும் பாடலில், "கைத் திருத்தொண்டு செய் கடப்பாட்டினார்’ என்று விளக்கமாகவே சேக்கிழார் கூறிவிடுகிறார். எனவே, இத்தொண்டர்கள் தாம் செய்யும் மக்கள் தொண்டையும் ஈசன் பணி என்று கருதியே செய்கின்றனர். பணி செய்வதைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார் 'ஈசன் பணி’ என்றும், அதனைச் செய்பவர் ஈர அன்பினர்’ என்றும், கூடும் அன்பினில் கும்பிடுபவர்’