பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54ஆ சேக்கிழார் தந்த செல்வம் என்றும் கூறுவதில் ஒர் ஆழமான தத்துவம் அடங்கி யிருப்பதை அறிதல் வேண்டும். மக்கள் தொண்டு செய்ய முற்படுவோர்க்கு இறையன்பு அவசியமா? இறையுணர்வில்லாதவர்கள் மக்கள் தொண்டில் ஈடுபட முடியாதா என்ற வினாவை எழுப்பினால் ஒர் உண்மை அறிய முடியும். இறையன்பு இல்லா தவர்கள் தொண்டு செய்கையில் அவர்களையும் அறியாமல் நாம் செய்கிறோம், நம்முடைய பணி இல்லாவிட்டால் இந்த மக்கள் பெருந்துன்பம் அடைவர் என்ற எண்ணம் தலைதூக்கத்தான் செய்யும். அந்த அகங்காரம் வெளிக்காட்டப்படா விட்டாலும், அத்தொண்டைப் பெறுவோர் மனத்தில் ஒர் ஆதங்கத்தை விளைத்தே தீரும். இறையன்பில்லா தவர்கள் தொண்டில் இந்த நான் தலைநிமிர்ந்து நிற்பதைத் தவிர்க்கவே முடியாது. இறையன்பு மனத்தில் நிறையும்பொழுது யாருக்குத் தொண்டு செய்கிறோம் என்ற வினாவே எழுவது இல்லை. இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கட்குத் தொண்டு செய்கிறோம் என்ற நினைவு வந்தவுடன் அந்த நான்’ மறைந்தேவிடுகிறது. இந்த உண்மையை வெளிப் படுத்தவே, இறையன்போடு கூடிய தொண்டைச் சேக்கிழார் வலியுறுத்திப் பேசுகிறார். 'கைத் திருத்தொண்டு செய் கடப் பாட்டினார் என்று கூறுவதால் இந்த அடியார்கள் மக்கள் தொண்டைத் தம் கடமையாகவே கருதினர் என்று பெறப்படும். ஒருவர் தம் கடமையைச் செய்யும்பொழுது அதில்