பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் - 55 பெருமையோ கர்வமோ அடைய நியாயமே இல்லை. ஆகவே, இறைவன் இட்ட பணி என்று கருதிய தாலும், கடமை என்று கருதியதாலும் மக்கள் தொண்டு இயல்பாகவே அவர்களிடம் அமைந்து விட்டது. இந்த அடியார்களிடம் மேற்கூறிய பண்புகளுடன் வள்ளுவர் கூறும் மற்றொரு பண்பும் நிறைந்திருந்தது என அறிகிறோம். வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை, யாண்டும் அஃதொப்பது இல்’ • , . * . . ; - (குறள்-363) என்ற குறளில் கூறியபடி வேண்டாமை ஆகிய செல்வம் இவர்களிடம் நிறைந்திருந்தது. அதனையே "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார் என்பதையும் அறிதல் வேண்டும். அடியவரிடம் சேக்கிழார் ஈடுபாடு ஏன்? நூற்றுக்கணக்கான திருக்கோயில்களைக் கட்டி, ஆயிரக்கணக்கான காணி நிலங்களை அத்திருக் கோயில்கட்கு இறையிலியாகத் தந்த சோழப் பரம்பரையினரின் வரலாற்றை நன்கு அறிந்திருந்த சேக்கிழார், கந்தை உடுத்திய இந்த அடியார்களிடம் எதனைக் கண்டு ஈடுபட்டார்? அவர் காலத்திய