பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சேக்கிழார் தந்த செல்வம் மனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர் இக்காப்பியத்தைப் பாட முன் வந்ததற்கு, இதுவும் ஒரு பெருங்காரணமாகும். சேக்கிழாரின் தனிச் சிறப்பு? அடியார்கள் என்று அழைக்கப்படும் இத்திருக் கூட்டத்துப் பட்டியலைத்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் பதிகத்தில் தந்தார். அந்தப் பதிகத்தின் தனிச் சிறப்பைச் சேக்கிழார் தவிர வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கொரு காரணமும் உண்டு என்று நினைக்கலாம். எந்த ஒரு சுவையை நாம் அனுபவிக்க வேண்டு மென்றாலும் அந்தச் சுவை, அனுபவிக்கின்றவர் மனத்தில் ஒரு சிறிதாவது இருத்தல் வேண்டும். வீரம், நகை, காதல் முதலிய ᏭᎦ©ᏈᎧ☾al ᏧᏠ5óᏡ}öᎢ அனுபவிக்கின்றவர்கள் அந்தச் சுவையின் ஒரு பகுதியை முன்னரே பெற்றிருத்தல் வேண்டும். அழுகைச் சுவைக்குரிய ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், அதைப் பார்ப்பவர் அனைவரும் ஒரே மாதிரியாக அதில் அழுந்திவிடுவதில்லை. ஒரு சிலர் அதில் ஈடுபட்டுக் கோவென்று கதறி அழுவர். ஒரு சிலர் அதனால் எவ்விதப் பாதிப்புமில்லாமல் கல்லாய்ச் சமைந்திருப்பர். இந்த நாயன்மார்கள் வரலாற்றில் ஆணிவேராக இருக்கும் இறையன்பு (பக்தி)ச் சுவையில் ஈடுபட எல்லாக் கவிஞருக்கும்