பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டளைகள் பற்றி எழுதியுள்ளேன். அந்தக் கட்டளையின் ஒரு பகுதியாக கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் திரு. துரைசாமி நாயுடு அவர்கள் இராமனைப் பற்றி எழுத பணித்த பொழுது அதனை நிறைவேற்றினேன். சித்தர் பெருமானின் கட்டளையின் மற்றொரு பகுதியாக திரு.விஜய திருவேங்கடத்தின் ஆணை பிறந்தது. அதனை நிறைவேற்ற உதவி இயக்குனரின் துரண்டுதல் உதவிற்று. அதன் பயன் தான் சேக்கிழார் தந்த செல்வம் என்ற தலைப்பில் பத்து பேச்சுக்கள் பேசினேன். பெரியபுராணத்தை பக்தி நூலாகக் காணும் முறையில் சிலர் நூல்கள் எழுதியுள்ளனர். வேதத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து, பெரியபுராணம் ஒர் ஆய்வு' என்ற நூலை 1985ல் எழுதினேன். வானொலிப் பேச்சில் அதை ஒரு சமுதாய நூலாகக் காணவேண்டும், குறிக்கோள் அற்று, செல்லும் திசை தெரியாமல் தாழ்ந்து கிடந்த 12ஆம் நூற்றாண்டு தமிழினத்தைத் துரக்கி நிறுத்த சேக்கிழார் பெருமான் செய்த முயற்சியே பெரியபுராணம் ஆகும். இந்த எண்ணம் நீண்ட காலமாக என் மனத்துள் ஆழ்ந்து படியத் தொடங்கிற்று. பெரியபுராணத்தில் பக்தியும் உண்டு, சமயமும் உண்டு. என்றாலும் இவை அனைத்தையும் தாண்டி மனிதன் மனிதனாக வாழவேண்டுமேயானால் குறிக்கோள், இறை உணர்வு, தொண்டு என்ற மூன்றும் வாழ்வில் தலை தூக்கினாலன்றி ஓரினம் சிறந்த வாழ்வை பெறமுடியாது என்பதே பெரியபுராணத்தின் உயிர்நாடி என்ற கருத்து மனத்தில் தோன்றவே அந்த