பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 59 இயன்றிருக்காது. சேக்கிழார் ஒருவருக்குமட்டுமே அச்சுவையில் ஈடுபடும் தனித்தன்மை இருந்ததால் தான், இந்த உதிரி வரலாறுகள் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடிய சேக்கிழார் பிள்ளைத்தமிழில் பக்திச் சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவர் என்று கூறுகிறார். உவமைகள் உள்ளத்தைக் காட்டும் ஒரு கவிஞன் உவமை கூறும்பொழுது அவன் உள்ளத்தில் எந்தவொன்று மிகுந்திருக்கிறதோ அந்த அடிப்படையிலேயே அவன் உவமைகள் அமையும். ஒரு கவிஞன் பயன்படுத்திய உவமைகளையெல்லாம் ஒன்றாய்த் தொகுத்துப் பார்த்தால் அவனுடைய மனத்தில் எந்த ஒன்று அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை அறியமுடியும். உதாரணத்திற்காக ஒன்றை இங்கே காணலாம். 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்கதேவர் தலையாய கவிஞருள் ஒருவர். தமிழின் மிகச்சிறந்த காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணி இயற்றியவர் அவர் அக் கவிஞர் பெருமகனார் மிகச் சாதாரணமாக நாம் அன்றாடம் கானும் நெற்பயிரின் வளர்ச்சியைப் { fot) உவமைகளோடு ஒரே பாடலில் பாடியுள்ளார்.