பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சேக்கிழார் தந்த செல்வம் "சொல் அருஞ்துல் பசும்பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார் செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே' (சீவக சிந்தாமணி - 53) என்ற மிக அற்புதமான இப்பாடலில் நெற்பயிர் சூல் கொண்டு இருந்ததற்குப், பச்சைப்பாம்பு சூல் கொண்டு இருத்தலையும், பால் பிடிக்காத கருக்காய்க் கதிர்கள் தலையைத் துரக்கிக்கொண்டு நிற்பதற்கு அற்பர்கள் கையில் செல்வம் வந்தால் அவர்கள் தலையைத் துரக்கிக்கொண்டு நிற்பதையும், பால் பிடித்து மணி நிரம்பிய கதிர்கள் வளைந்து தொங்குவதற்குக், கல்வி நிறைந்த அறிஞர்கள் தலை வணங்கி இருப்பதையும் உவமைகளாகக் கையாள்கிறார். நெய்தற்கலியில் வரும் "தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரம் துஞ்ச' (கலித்-19) என்ற உவமைதான் தேவர் பெருமான் கையில் பட்டு, இன்னும் வளர்ச்சி அடைந்து, மெருகேறி மேலே காட்டிய பாடலாக வெளிப்படுகிறது. தேவர் பெருமான் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சேக்கிழாரோ 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். எனவே, திருத்தக்க தேவருடைய இந்த அற்புதக் கவிதையில் ஈடுபட்டு இந்த உவமையைத் தாமும் மேற்கொள்ள விரும்புகிறார். முற்றிய நெற்கதிர்கள் தலை வளைந்து இருப்பது எக்காலத்தும் நிகழ்வ தாகும். எனவே, இதைக் கூறவந்த சேக்கிழார்