பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 63 தொண்டர் வரலாற்றில் வருணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பாலாற்றைப் பொறுத்த மட்டில் ஆண்டில் பெரும்பகுதி நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும். ஆனாலும் பாலாற்றுப் படுகையில் வேளாண்மை நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. வேளாளர்கள் தேவைப்படும்பொழுது பாலாற்று மணலைப் பறித்து, ஊற்று உண்டாக்கி அத் தண்ணிரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தனர். கம்பன் உவமையில் உள்ள குறையைப் போக்கி, அதே உவமையைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார். பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கை வருட வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப் பள்ளநீள் வயல் பரு மடை உடைப்பது-பாலி (பெ. பு -104) 'பிள்ளை, முலையில் வாய் வைத்துக் குடிக்கத் தொடங்கியவுடன், தாய்க்குப் பால் பெருகுவது போல், வேளாளர்கள் தேவைப்படும்பொழுது பாலாற்றின் மணலைப் பறித்து, ஊற்று உண்டாக்கிய வுடன் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது என்பதே இப்பாடலின் பொருளாகும். காவிரியை வருணிக்கவந்த கவிஞர் அது மலையில் தோன்றி நாட்டிடைப் புகுந்து பல்வேறு வளங்களை உண்டாக்குதலால், “ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது” (பெ. பு-56) என்று உவமை கூறியது மேலே