பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சேக்கிழார் தந்த செல்வம் சொன்ன கருத்தை வலியுறுத்தும். இதைவிடச் சிறப்பான ஒர் இடமும் உண்டு. கண்ணப்பர் வேட்டையாடுவதை வருணிக்கவந்த கவிஞர், அற்புத மான ஓர் உவமையைக் கையாளுகிறார். வேட்டை யாடுபவர்கள் மிகப் பெரிய வலையை அகன்ற இடத்தைச் சுற்றிவளைத்துக் கட்டிவிடுவார்கள். வலைக்கு வெளியே வேட்டை நாய்களைச் சிறு இடைவெளி விட்டு நிறுத்தி விடுவார்கள். பிறகு, பறை முதலிய ஓசைகளை எழுப்பி, செடிகளிடையே பதுங்கியிருக்கும் விலங்குகளை வெருட்டுவார்கள். வெருண்டோடும் விலங்குகள், வலையில் மாட்டிக் கொள்ளும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு மிருகங்கள் வலையின்மேல் எம்பிக் குதித்துத் தப்பித்துக்கொள்ள முயலும். அப்படித் தப்ப முயலும் விலங்குகளை அங்கு நிற்கும் வேட்டை நாய்கள் கவ்வி இழுத்துவிடும். வேட்டையாடும் இம் முறையை வருணிக்க வந்த கவிஞர், அருமையான ஒர் உவமையைக் கையாள்கிறார். "பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலை அற I560)P LDT உலமொடு படர்வண்தகைஉற, உறுசினமொடு - கவர்நாய்: நிலவியஇரு வினைவலியிடை நிலைசுழல்பவர்

  • ... ." ... . . நெறிசேர் புலன் உறுமணன் இடைதடை செய்த பொறிகளின்

அளவு உளவே.' (பெ. பு-734)