பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 65 இதில் விவரிக்கப்பட்ட உவமையைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். ஆன்மாக்கள் நல்வினை, தீவினை என்ற இரு வலைகளுக்குள் அகப்பட்டு மீள முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த இரு வலை களையும் தாண்டியே தீரவேண்டும் என்ற முனைப்போடு ஒரு சில ஆன்மாக்கள் வீடு பெறும் நெறியை அறிந்து இவ்வலைகளை எம்பித் தாண்டியோ, அறுத்துக்கொண்டோ முன்னேற முற்படும். அப்படித் தாண்டிச் செல்லும் உயிர்களை மனம் என்ற வேடன், ஐம்பொறிகள் என்னும் வேட்டை நாய்களைச் சுற்றி நிற்கவைத்து விடுகின்றானாம். வினை வலையில் இருந்து தப்பி வெளியே வந்த இந்த ஆன்மாவை, ஐம்பொறிகள் என்னும் வேட்டை நாய்களுள் ஏதாவது ஒரு பொறி இந்த ஆன்மாவைப் பிடித்து இழுத்து மேலே செல்ல விடாமல் தடுத்து விடுகின்றதாம். இதுவே 3,4ம் அடிகளில் சொல்லப் பட்ட உவமையாகும். சேக்கிழாரின் இந்த உவமையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள, குறள் உரையாசிரியராகிய பரிமேலழகர் உதவி புரிகின்றார். குறளில் துறவு என்ற அதிகாரம் 35வது அதிகாரமாகும். துறவு என்பது அனைத்தையும் துறந்துவிடுதலாகும். அதனைக் கூறி முடித்த பின்பு 37வது அதிகாரமாக அவாவறுத்தல் என்ற அதிகாரம் காணப்படுகிறது. முழுத் துறவுக்குப் பின் அவா எங்ங்ணம் ஏற்படும்? இது பொருத்தமாக இல்லையே என்று ஐயுறுவார்க்கு இவ்வதிகாரப்