பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சேக்கிழார் தந்த செல்வம் பொருத்தத்தை விளக்கவந்த பரிமேலழகர் "அவா வறுத்தலாவது சஞ்சிதம் ஆகாமியம் முன்னும் பின்னும் வினைத் தொடர்பறுத்தார்க்கு நடுவுநின்ற உட்ம்பும் அது கொண்ட வினைப் பயன்களும் (பிராரத்துவம்) நின்றமையின், அதுபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே, அந்நினைவும் அவிச்சையெனப் பிறவிக்கு வித்தாமாகலின், அதனை இடைவிடாத மெய்ப்பொருள் உணர்வால் அறுத்தல்.’’ என்று கூறி முடிக்கிறார். எத்துணை உயர்ந்த ஞானிகளும் ஒரோவழிப் புலன் உணர்வால் அவதிப்படுதலை விசுவாமித்திரர் வரலாறு போன்றவை நமக்கு அறிவுறுத்துகின்றன. இத்துணைச் சிறப்பையும், "நிலவிய இருவினைவலையிடை' என்று தொடங்கும் உவமையில் சேக்கிழார் பெருமான் வைத்துக் காட்டியது ஈடு இணையற்றதாகும். இது போன்ற நூற்றுக் கணக்கான உவமைகளைப் பயன் படுத்திக் காப்பியம் அமைத்துள்ளார் தெய்வப்புலவர் சேக்கிழார். அதிகம் புனைந்துரையாமை உலக மொழிகளில் உள்ள பெரும்பாலான காப்பியங்கள் உயர்வுநவிற்சி அணியை மிகுதியாகக் கையாண்டுள்ளன. கற்பவர் மனத்தில் ஒரு கருத்தை ஆழமாகப் பதிப்பதற்குக் கவிஞர்கள் உயர்வுநவிற்சி அணியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வகையில்