பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சேக்கிழார் தந்த செல்வம் வறுமைமட்டு மல்லாமல் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் வாழும் திருநாளைப்போவார் போன்றவர்கள் வாழ்க்கையை வருணிக்கும்பொழுது மிக அற்புதமாக அதை விளக்குவதைக் காணலாம். அமைச்சராக வாழ்ந்த இவர், அரிசனர் வாழும் சேரியில் பலகாலம் வாழ்ந்து அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தவர்போலப் பாடுவது இவரது நுண்மாண் துழைபுலத்திற்குத் தகுந்த எடுத்துக்காட்டாகும். திருநாளைப்போவார் வாழ்ந்த ஆதனுர், தற்காலத்தில் காணப்படும் ஒரு சிறு நகரம் போன்றதாகும். வேளாண்மையை நம்பி வாழும் நடுத்தர வர்க்கத் தினரும், வசதி படைத்தவரும் வாழ்கின்ற ஊர் என்று கூறவந்த சேக்கிழார், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பாடல்களில் அவ்வூரின் இயற்கை வளத்தையும், வேளாண் வளத்தையும் மிக அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார். இவ்வளவு வளம் நிறைந்த ஊரில் வாழும் மேட்டுக்குடி மக்கள் உறைகின்ற வீடுகளைப் பற்றிக் கூறவந்த கவிஞர், புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் அயல் இடை வேறுஅடி நெருங்கக் குடிநெருங்கி உளது அவ்வூர் (பெயு-1050) என்று பாடுகிறார்.