பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 69 இவ்வளவு விரிவாகப் பொருட்செல்வம் மிகுந்த மக்கள் வாழும் பகுதியைக் கூறிவிட்டு, அடுத்த நான்கு பாடல்களில் அரிசனமக்கள் வாழும் பகுதியை இதேபோல விரிவாகப் பாடுகிறார். புலைப் பாடி என்று அழைக்கப்படும் அப்பகுதிகளில் புயல் தழுவும் மாடங்களுக்குப் பதிலாக, வைக்கோலால் வேயப்பட்ட கூரைகளோடுகூடிய சிறு குடில்கள் நிறைந்துள்ளன என்றும், அக் கூரைகளின் மேல் சுரைக்கொடி படர்ந்து காய்கள் காய்க்கின்றன என்றும் பாடுவதோடு அங்கு வாழும் மக்கள் வாழ்க்கையையும், அவர்கள் வறுமையையும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுவதன்மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார். கூர்உகிர்மெல் அடி அளகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும் வார் பயில்முன் றிலில் நின்ற வள் உகிர்நாய்த் துள்ளுபறழ் கார் இரும்பின் சுரி செறி கைக் கருஞ் சிறார் கவர்ந்துஒட, ஆர்சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி . (பெயு-1052) என்ற இப்பாடலில் ஓர் அற்புதமான காட்சி வர்ணிக்கப்படுகிறது. குடிசைகளின் அணித்தே நாய் ஒன்று பல குட்டிகளை ஈன்றுள்ளது. சேரியில் உள்ள இளஞ்சிறார்கள் இந்த அழகிய நாய்க் குட்டிகளை