பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சேக்கிழார் தந்த செல்வம் எடுத்துக்கொண்டு விளையாடுவதற்காக ஒடுகிறார்கள். தாயைப் பிரிந்த குட்டி கண் திறவாப் பருவமாதலின் தன் மெல்லிய குரலால் குரைக்கின்றது. ஆனால், இந்தக் குட்டிகளின் மெல்லிய குரல் வேறு எங்கும் கேட்காதவாறு, இந்தச் சிறார்கள் இடையில் கட்டியுள்ள மெல்லிய இரும்புச் சலங்கைகள் பெரிய ஒலி எழுப்பி அந்த நாய்க்குட்டியின் குரலை அமுக்கி விடுகின்றனவாம். அடுத்த பாடலில், புலைப்பாடிப் பெண்கள் குடிசைக்குள் தொட்டில் கட்ட முடியாமையால் அடுத்து வளர்ந்துள்ள மருத மரத்துக் கிளைகளில் தொட்டில் கட்டிக் குழந்தைகளை உறங்க வைக்கின்றனர். கோழிகள் முட்டையிட்டு அடை காக்க வசதியாகப் பெரிய பானைகள் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றன. மாமரங்களில் இவர்களது இரண்டாவது தொழிலாகிய பறை, முரசம் என்ப வற்றிற்குப் பதனிட்ட தோலைக் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். சேக்கிழார் இங்குப் பாட வந்தது திருநாளைப் போவார் வரலாற்றையே ஆகும். அவர் வாழ்ந்தது ஆதனுரரை அடுத்துள்ள இச்சேரிப் பகுதியே ஆகும். இதை வருணிப்பது வரலாற்றுக்குத் தேவையான ஒன்றாகும். ஆனால், முதல் ஐந்து பாடல்களில் ஆதனூரில் மற்றொரு பகுதியில் வாழும் வளம் நிறைந்த மேட்டுக்குடி மக்கள் மாடங்களை வருணிக்க