பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சேக்கிழார் தந்த செல்வம் இன்னுங் கூறப்போனால் செல்வம் நிறைந்த வாழ்க்கை ஒரு சிலரைத்தவிரப் பெரும்பாலானவர் களுக்கு ஆன்ம முன்னேற்றம் கிட்டாமல் செய்து விடும் பெருந்தடையாகவே உள்ளது என்பதையும் சேக்கிழார் குறிப்பாகக் காட்டுகிறார். சேரியின் வருணனையை இயல்பு நவிற்சி என்று ஒதுக்கிவிடாமல், ஆழ்ந்து ஆராய்ந்தால் மேலே கூறிய உண்மையை விளங்கிக்கொள்ள முடியும். இப் பகுதியில் வாழ்ந்த நந்தனார், வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் உழைத்தாலொழிய இரவுக் கஞ்சிக்கு வழியில்லை என்று சொல்லும் நிலையில் வாழ்ந்தவர். பகல் முழுதும் கருவிகளுக்குத் தோலைக் கிழித்து வார் கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருடல் இத்தொழிலில் பகல் முழுதும் ஈடுபட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர் மனம் எங்கே இருந்தது என்பதைக் கூறவந்த சேக்கிழார், இங்ங்னம் பாடுகிறார்: பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக்கண்ணிப் பெருந்தகையால் சிறந்த பெருங் காதலினால் செம்மைபுரி சிந்தையராய் மறந்தும் அயல்நினைவு இன்றி, வருபிறப்பின் வழிவந்த அறம்புரி கொள்கையராயே அடித் தொண்டின் நெறி நின்றார். )6 اسلام --O57(