பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 73 இக் காலத்தில் நம்மில் பலரும் வயிற்றுப் பாட்டைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. இதில் இறையன்பு செய்வதற்கும், தொண்டு செய்வதற்கும் நேரமெங்கே. என்று சொல்லிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். நமக்கு அறிவு புகட்ட வந்த சேக்கிழார் ஆதனுர் மேட்டுக்குடி மக்களையும் புலைப்பாடி நந்தனையும் அடுத்தடுத்து வைத்துக் காட்டுவதன்மூலம் நாம் இன்று கூறும் சமாதானம் எவ்வளவு தவறானது என்பதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கூறுவதால் வறுமை வாழ்க்கை வாழ்ந்தால் தான் இறையன்பு கொள்ளமுடியும் என்று நினைத்து விட்டால் அதுவும் தவறு என்பதை வேறு சில வரலாறுகளில் வைத்துக் காட்டுவார் சேக்கிழார். மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டை ஆண்ட மன்னராவார். பெருஞ் செல்வத்தில் வாழ்ந்த அவர் இறையன்பிலும் அடியவர் பணியிலும் தலைநின்றவர் ஆவார். அவருடைய செல்வம், அரச வாழ்க்கை என்பவை அவருடைய இறையன்பிற்குக் குறுக்கே நிற்கவில்லை என்பதைக் கூறவந்த சேக்கிழார், தேடிய ம்ாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று (பெயு-47) கருதி வாழ்ந்தார் என்று பாடுகிறார். பெரு வணிகராகிய அமர்நீதியார் செல்வத்திற்கு அளவே இல்லை என்பதை,