பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சேக்கிழார் தந்த செல்வம் மன்னும் அப்பதி வணிகர்தம் குலத்தினில் வந்தார்; பொன்னும் முத்தும் நன்மணிகளும் பூந்துகில் முதலா எந்நிலத்தினும் உள்ளன. வருவளத்து இயல்பால், அந்நிலைக்கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் - (பெபு-503) என்ற பாடலில் கவிஞர் தெரிவிக்கின்றார். இவ்விரண்டு வரலாறுகளாலும் பெருஞ்செல்வம் படைத்திருப்பது இறையன்பு செய்வதற்கும் தொண்டு செய்வதற்கும் தடையாக நிற்கும் என்று நினைப்பதும் பெரும் தவறாகும் என்பதைக் கூறிவிட்டார். நந்தனாரின் வறுமையோ அமர்நீதியின் செல்வமோ அவர்கள் இருவருடைய இறையன்புக்கும், ஆன்ம முன்னேற்றத்திற்கும் தடையாக நிற்கவில்லை என்பதை மிகச் சிறப்பாகக் கவிஞர் எடுத்துக் காட்டியுள்ளார். . r மனிதனாகப் பிறந்த ஒருவன் இறையன்பு பெறுவதற்கும் ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்கும், மக்கள் தொண்டில் ஈடுபடுவதற்கும் அவனுடைய சாதி, குலம், குடிப்பிறப்பு, வறுமை, செல்வம், பதவி, அதிகாரம், சூழ்நிலை என்பவை எக்காலத்திலும் எந்நிலையிலும் எக்காரணத்துக்காகவும் தடையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என்பதைத் தெய்வச் சேக்கிழாரைப்போல அறுதி யிட்டுக் கூறியவர்கள் வேறுயாருமில்லை. அவருடைய தனித்துவங்களில் இது ஒரு முக்கிய மானப் பகுதியாகும்.