பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் 75 சமுதாயப் பார்வை : இந்நூலின் நோக்கம் இதுவரை, சேக்கிழார்பற்றிப் பொதுவாகக் கூறிவந்த சிறப்புக்களை இத்துடன் நிறுத்தி, அவர் பாடிய நூலுள் சில வரலாறுகளை எடுத்துக் கொண்டு விளக்கமாகக் காண்பதே இந்நூலின் நோக்கமாகும். 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவன். என்றாலும், அந்தப் பக்திச் சுவையை எடுத்துக்காட்டுவது இந்நூலின் நோக்கமன்று. இங்குக் காணப்போகும் வரலாறுகள், எந்த அளவு அன்றைய சமுதாயத்திற்கும் இன்றைய சமுதாயத்திற்கும் நாளை வரப்போகும் சமுதாயத்திற்கும் சிறந்த பாடங்களாக அமையும் என்பதைக் காண்பதே நம் நோக்கமாகும். சைவத் திருமுறைகளில், பன்னிரண்டாவது திருமுறை என்று வைக்கப்பெற்றுப் பூசனைக்குரியதாகச் சைவப் பெருமக்கள் கருதும் ஒரு நூலை-அதில் உள்ள வரலாறுகளைச் சமுதாயப் பார்வையில் ஆராய்வது முறையா, தேவையா என்று சிலர் நினைக்கக்கூடும். அவர்கட்கு ஒரு வார்த்தை சைவ சமயத்தின் பெருமையை உணர்த்துவதற்கும் பக்திச் சுவை ஊட்டுவதற்கும் தேவார, திருவாசகம் என்பவை உள்ளன. பக்திச் சுவை ஊட்ட திருவாசகம் ஒன்றே பேர்துமானது. எனவே, அவற்றை வலியுறுத்தப் பெரியபுராணத்தையும் அழைக்க வேண்டிய தேவை யில்லை. பெரியபுராணத்தில் பக்திச் Ꭶ6üᎧᏊaᏗ வழிந்தோடுவதைப், புறச்சமயத்தார்கூட மறுக்க மாட்டார்கள். என்றாலும், அச்சுவையின் சிறப்பை உணர்த்தப் பெரியபுராணத்தைச் சேக்கிழார் பாட