பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சேக்கிழார் தந்த செல்வம் வில்லை என்பதை அறிதல் வேண்டும். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டு நின்ற இத் தமிழ்ச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்தி, அவர்கள் வாழ்க்கையில் தொண்டு, குறிக்கோள் என்ற கால்களின் உதவியால் தமிழ்ச் சமுதாயம் நடைபோட வேண்டும் என்பதற்காகவே சேக்கிழார் இந்நூலை இயற்றினார் என்பதை அறிந்துகொண்டால், 20ஆம் நூற்றாண்டில்மட்டு மல்ல, 24ஆம், நூற்றாண்டில்கூட இந்நூல் மக்கள் சமுதாயத்திற்குத் தேவைப்படும் என்பதை அறியவேண்டும். அதனை வலியுறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும். அடுத்து, மனுநீதிச் சோழன், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார், கண்ணப்பர், திரு நீலகண்டர் என்பவர்களின் வரலாறுகள் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஆராயப்பெறுகின்றன. இவ்வாறு காண்பதால், இந்நூலின் பக்திச் சுவையையோ, கவிதைச் சிறப்பையோ, கற்பனை வளத்தையோ குறைத்து மதிப்பிடுவதா என்று யாரும் நினைய வேண்டா. மேலேகண்ட பல்வேறு அணுகுமுறையில் சேக்கிழாரை ஆராயலாமேனும், சமுதாயக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இந்நூலின் நோக்கம் ஆகும். ○30@@@