பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மனுநீதி என்னும் வழிகாட்டி - மனுநீதிக் கதைபற்றிய சிந்தனை : சுந்தரர் குறிக்காதது பெரியபுராணத்தில் யார் யாருடைய வரலாறு களைச் சேக்கிழார் பாட எடுத்துக்கொண்டார் என்று பார்த்தால், ஒர் உண்மை விளங்கும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தில் உள்ள 11 பாடல்களில், யார் யார் பெயர் இடம் பெற்றுள்ளனவோ அவர்களுடைய வரலாறு களையே-அப்பாடல்களில் கண்ட வரிசைப்படியே முன்பின் மாறாமல் பாடியுள்ளார். மாபெரும் காப்பியப் புலவராகிய சேக்கிழார், சுந்தரர் பாடிய முதல்நூலுக்கும், நம்பியாண்டார் நம்பிகள் பாடிய வழிநூலுக்கும் பெருமரியாதை செய்து, அவற்றிலிருந்து மாறுபடாமலேயே தம் காப்பியத்தை அமைத்து உள்ளார். என்றாலும், பாயிரம் என்ற பெயரில் 10 பாடல்களும் திருமலைசிறப்பு என்ற பெயரில் 40 பாடல்களும் திருநாட்டுச் சிறப்பு என்ற பெயரில் முப்பத்தைந்து பாடல்களும், திருந்கரச் சிறப்பு மனு நீதி கண்ட் புராணம்-ஆறுமுக நாவலர் பதிப்பில் மட்டும் என்ற பெயரில் ஒரு வரலாற்றை ஐம்பது பாடல்களிலும் திருக்கூட்டச்சிறப்பு என்ற பெயரில் 11 பாடல்களும் விரிவாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.