பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 79 திருத்தொண்டத்தொகையில் வரும் அடியார்கள் அனைவரும் குறிப்பிட்ட கால கட்டத்தில், தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்த வரலாற்று நாயகர்கள் ஆவார்கள். இவர்களுள் 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவரசருக்கும் முற்பட்டவர்கள் - கண்ணப்பரும், . காரைக்கால் அம்மையாரும். எனவே, வரலாற்று நாயகர்களின் வரலாறுகளைப் பாடவந்த சேக்கிழார் செவிவழிக் கதையாக வழங்கும் மனுநீதிச் சோழன் கதையை எவ்வாறு தம் நூலுள் புகுத்தினார் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். . - : : ஏன் இந்தக் கதை? ஆறுமுக நாவலர் பதிப்பில் இப்பகுதி மனு நீதி கண்ட புராணம்’ என்ற தலைப்பில் அச்சிடப் பெற்றுள்ளது. அவ்வாறு பெயர் வைப்பது பின்னே வரும் புராணங்களோடு சேர்த்து மனுநீதிச் சோழனும் சுந்தரரால் பாடப்பெற்ற ஓர் அடியார் போலும் என்ற குழப்பம் கற்பவர் மனத்தில் ஏற்பட இடமுண்டு. அது கருதியே பின்னர் வெளிவந்த சைவசித்தாந்த மகாசமாஜப் பதிப்புக்களில் இப்பகுதி திருநகரச் சிறப்பு என்ற தலைப்பில் அடக்கப் பெற்றுள்ளது. எது எவ்வாறாயினும், பெரியபுராண அடியார்களோடு ஒரு சிறிதும் தொடர்பில்லாத மனுநீதிச் சோழன் கதையைச் சேக்கிழார் ஏன் இங்கே