பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சேக்கிழார் தந்த செல்வம் பாடினார் என்ற வினாவை எழுப்பினால், ஒரு சிறந்த விடையைக் காண முடியும். இந்த நூலின் முதல் கட்டுரையில், தமிழ் மக்களிடையே குறிக்கோளும், தொண்டுணர்ச்சியும் இல்லாமல் போய்விட்டதை அறிந்து அவற்றைத் தட்டி எழுப்பவே இந்நூலை எழுதினார் என்று கூறப்பெறுதலை நினைவுக்குக் கொண்டுவருதல் நலம். அப்படியானால், மனுநீதிக் கதையிலும், குறிக்கோள், தொண்டு என்பவை இடம் பெற்றுள்ளனவா என்ற வினாத் தோன்றின், இல்லை என்றே பதில் கூற வேண்டும். வேறு என்ன கருத்தில் இக் கதையைச் சேக்கிழார் இங்கே புகுத்தினார் என்று சிந்திக்கும்பொழுது இரண்டொரு பின்னணி களை நினைவில் கொள்வது நலம், 12ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை கற்பனைக்கடங்காத அளவில் உயர்ந்திருந்தது உண்மைதான். அந்த நிலையில், அதாவது, நிதி எல்லையற்று வளர்ந்த நிலையில் நீதி, அரச நீதி, தனிமனித வாழ்வு நீதி என்பவை எங்கோ சென்று மறைந்துவிடும். அரசர்கள் வாழ்வில் நீதி அல்லது அறம் என்பது மறைந்தால் விளைவு என்னவாகும் என்று சொல்லத் தேவை யில்லை. இந்த அடியார்களின் வரலாற்றை அறிந்து கொண்டதால் அரசர்கள் அரசநீதியை நிலை நாட்டுவர் என்று கூற முடியாது. எனவே, அரசர்கள், மிகப் பெரிய பதவியில், அதிகாரத்தில் இருப்பவர்கள்