பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 81 எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட இக் கதையைச் சேக்கிழார் பயன்படுத்தினார். இந்த ஒரு கருத்தின் விரிவே மனுநீதிச் சோழன் கதை ஆகும். கதை கதை மிகச் சுருக்கமானது தான், திருவாருரில் சோழன் ஒருவன் ஆட்சி செய்துவந்தான். அவன் மகன் தேரில் ஏறி ஒரு நாள் படைகள் புடைசூழ அகன்ற பெரிய வீதியில் உலாச் சென்றான் அப்பொழுது இளைய பசுங்கன்று ஒன்று தேர்ச் சக்கரத்தில் மாட்டி, உயிரை விட்டது. கன்றை இழந்தத் தாய்ப்பசு அரண்மனை சென்று தன் கொம்பால் அங்கு இருந்த மணியை அடித்தது. மணிச் சத்தம் கேட்டு வெளியே வந்த அரசன் பசுமாடு ஒன்று கண்ணிருடன் நிற்பதைக் கண்டான். அமைச்சர்கள் மூலம் நடந்ததை அறிந்த மன்னன், பசுங்கன்றை எழுப்பித் தரமுடியாத காரணத்தால் அப்பசுவின் துயர் துடைக்க முடியாமல் போயிற்று. அது இயலாமல் போனபொழுது பசுவின் துயரத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி. தன் மகனைக் கீழேகிடத்தித் தேரை அவன் நெஞ்சின்மேல் செலுத்தினான். இறைவன் * :. காட்சி தந்தான் என்று கதை முடிகிறது. . . . . .