பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சேக்கிழார் தந்த செல்வம் கதையால்- அடிப்படை அறங்கள் தமிழர் அறம் இக் கதையின் ஒவ்வொரு பகுதியும் அன்று மட்டும் அல்ல. எக்காலத்தும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய பல அடிப்படை அறங்களை எடுத்துரைப்பதாதலின் இக்கதையைச் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரான சேக்கிழார், பெரியபுராணத்துள் வைத்தார். இதில் மற்றொன்றும் நம் சிந்தனைக்குரியதாகும். மகனைத் தேர்க் காலிலிட்டுக் கொல்வதுதான் தொல்மனுவின் நீதி என்று புராணத்தில் கூறப்பட்டிருப்பினும் எந்த மனுநீதியும் இவ்வாறு கூறவில்லை. பசுக் கொலைக்குக் கழுவாய் (பிராயச் சித்தம்) கூறப் பட்டுள்ளதே தவிர, இப்படியொரு நீதியை எந்த மனுவும் கூறவில்லை. அப்படி இருந்தும் மனுவின் பெயரைச் சேக்கிழார் பயன்படுத்தியதன் காரணம், அக்காலத்தில் அறிந்தோ அறியாமலோ நீதிநூல் இயற்றிய மனுவிற்கு ஒரு மிகப் பெரிய மரியாதை செலுத்திவந்தனர். அதனால்தான் சேக்கிழார் மனுவின் பெயரை இங்கே பயன்படுத்தினாரே அன்றி, வேறு காரணமில்லை. இங்குக் கூறப்பட்ட நீதி அல்லது அறம் என்பது மனுவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இத்தமிழர் கண்ட் அறமாகும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.