பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 83 அமைச்சரை இகழ்ந்து நோக்கி பசுவின் கன்று இறந்தவுடன் அத் தாய்ப்பசு கண்ணிருடன் வந்து அரண்மனை மணி அடித்தது என்பதைக் கூறவந்த சேக்கிழார், "மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி, 'என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி, முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் - முதிர்ந்த கேள்வித் தொல்நெறி அமைச்சன், மன்னன் தாள்.இணை தொழுது சொல்வான்" (பெ, பு-15) என்று பாடுகிறார். இப்பாடலில் வரும் அமைச்சரை இகழ்ந்து நோக்கி என்ற மூன்று சொற்கள் சிந்தனைக்குரியன. அமைச்சரைப்பற்றிக் கூறவந்த வள்ளுவப் பேராசான், சூழ்வார் கண்ணுக ஒழுகலான் மன்னவன் து.ழ்வாரைச் சூழ்ந்து கொளல். குறள்-445) என்று கூறிப்போனான். அரண்மனையின் உள்ளே இருக்கும் அரசன் நாட்டின் பல பகுதிகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தானே நேரில் காண்பது