பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சேக்கிழார் தந்த செல்வம் என்பது இயலாத காரியம். எனவேதான், அமைச்சர் களையும் அவர்கள் கீழ்ப் பணி புரிபவர்களையும் கண்களாக உருவகிக்கின்றார் நீதி நூல் ஆசிரியர் எந்த மூலையில் எது நடந்தாலும் அதனைக் காண்பவர்கள் தமக்கு மேலே உள்ளவர்களிடம் கூற, அவர்கள் அவர்களுக்கு மேலே உள்ளவர்களிடம் கூற, சில நாழிகைப் பொழுதில் இச்செய்தி அமைச்சரிடம் வந்து சேர்ந்துவிடுகிறது. செய்தியின் தகுதிக் கேற்ப உடனேயோ, அல்லது உரிய காலத்திலோ அமைச்சர்கள் மன்னரிடம் அதனை அறிவிக் கின்றனர். இந்த அறிவிப்பு முறை அன்றும், இன்றும், என்றும் உண்டு. துயருற்ற ஒரு பசுமாடு தானே வந்து அரண்மனை மணி அடித்ததென்றால், வாயில்லா அப் பிராணி பெருந்துயரத்தை அனுபவித்திருக்க வேண்டும். அதாவது, அப் பிராணிக்கு யாரோ பெருந்தீங்கு இழைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அப் பசு இக் காரியத்தைச் செய்திருக்காது. பசுவுக்கு யார், எப்பொழுது இப் பெருந்தீங்கை விளைத்தனர் என்பதை அரசனுக்குக் கண்களாக உள்ள அமைச்சர்கள் இதற்குள் அறிந்திருக்க வேண்டும் அறிந்திருந்தால் தன்னிடம் அதனைக் கூறியிருக்க வேண்டும். கூறாத காரணத்தால் அவர்கள் இத் தீங்கை அறியவில்லைபோலும், அதனை அறியாதவர்கள் அமைச்சர்களா என்ற வினாவை, மன்னன் бигтиитsi) கூறாமல்