பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 85 கண்களாலேயே கூறிவிட்டானாம். இப்படி ஒரு துயரம் நிகழ்ந்திருக்க அதுபற்றி அறியாத நீங்கள் அமைச்சர்களா? என்று கூறும் இகழ்ச்சிப் பார்வையை அவர்கள்மேல் வீசினான் மன்னன். அமைச்சர்கள் கூறாதது ஏன்? அக்காலத்து அமைச்சர்கள் உண்மையிலேயே குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த மன்னனின் அமைச்சர்களும் அவ்வாறே என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி அறிவிக்கின்றது. நடைபெற்ற நிகழ்ச்சி அதற்குள் ஓர் அமைச்சனுக்கு எட்ட, அவன் எல்லா அமைச்சர் களையும் கூட்டி நடந்ததை விவரித்து விட்டான். அப்படி இருக்க, அவர்கள் ஏன் இதனை மன்னன் காதுக்கு எட்டவிடவில்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மூன்று காரணங்களால் அமைச்சர்கள் இதனை அரசனிடம் கூறாது விட்டனர். முதலாவது, இறந்தவன் சோழ நாட்டுக் குடிமகன் அல்லன் இறந்தது ஒரு சாதாரண விலங்காகிய பசுங்கன்றுதான். இரண்டாவது, அந்தக் கன்றும் தானே வந்து தேர்க்காலில் விழுந்து இறந்தது. எனவே, இதில் யார்மேலும் குற்றம் சுமத்துவதற்கு ஒன்றும் இல்லை. மூன்றாவது, தேரில் ஏறிச் சென்றவன் அரசனது ஒரே குமாரன். இக் காரணங்களால்தான் அமைச்சர்கள் இதனைச்