பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சேக்கிழார் தந்த செல்வம் சாதாரண நிகழ்ச்சி என்று நினைத்து அரசனிடம் சொல்லாது விட்டனர். இது இவ்வாறுதான் நடைபெற்றது என்பதைப் பின்னர் வரும் பாடல் நன்கு விளக்குகிறது. முதிய அமைச்சர் விளக்கம் 'நடந்தவற்றைக் கூறுக’ என்று மன்னன் ஆணையிட்டவுடன் அமைச்சர்களுள் ஆண்டாலும் அனுபவத்தாலும் மிக முதிர்ந்த கிழட்டு அமைச்சன் ஒருவன் மிக அற்புதமான முறையில் நடந்தவற்றை ஒரே பாடலில் எடுத்துக் கூறுகிறான். உலகப் பிரசித்தி பெற்ற எந்தவொரு வழக்கறிஞனும்கூட நான்கே வரிகளில் அடுத்த வினாவிற்கு இடமின்றி இந்த முறையில் தன் வழக்கை முன்வைக்க முடியாது. இதோ அவன் பேசுகிறான். "வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணிநெடுந் தேர்மேல் ஏறி, அளவுஇல் தேர்ச் சேனன் சூழ அரசுஉலாந் தெருவில் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்தது ஆகத் தளர்வு உறும் இத்தாய் வந்து - விளைத்தது இத் தன்மை என்றான்' o . (பெ. பு-16)