பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 87 இப்பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிக ஆழமான பொருளைக் கொண்டிருக்கிறது. சோழருக்குப் பல பெயர்கள் இருப்பினும், வளவ' என்று அவனை விளிப்பதால், எல்லா வளங்களையும் பெற்றுள்ள நீ, ஒரு பசுங்கன்றின் இழப்புக்கு வருந்த வேண்டா என்பது குறிப்பு. குற்றத்தைச் செய்தவன் யாரோ ஒருவன் என்று நினைக்கும்பொழுது தோன்றும் சினம், தன்பிள்ளை என்று நினைக்கும்பொழுது தோன்றாதாகலின், நின் புதல்வன்' என்று கூறினான். ஒரு கொடுமை கண்ணெதிரே நடைபெற்றால் அது தோற்றுவிக்கும் உணர்ச்சிப் பெருக்கை, அதே கொடுமை எங்கோ கண் காணாத இடத்தில் நடைபெற்றது என்றறியும் பொழுது, அதே உணர்ச்சியைப் பெற முடியாது. எனவே, ஆங்கு என்று கூறினான். அரச குமாரன் தேரை வருணிப்பதற்காகமட்டும், ஓர் மணிநெடும் தேர்' என்று கூறவில்லை. ஓர் உயரமான தேரில் வருபவன், கீழே நடப்பதைக் காண முடியாது. காண முடியாவிட்டாலும், பசுங் கன்று அம்மா என்ற கூப்பிட்டுக்கொண்டுதானே வரும், அது காதில் விழவில்லையா என்ற வினாவிற்கு விடை அளிப்பது போல், தேரில் கட்டிய மணிச் சத்தம் அடக்கி விட்டது என்ற கருத்தையும் கூறினான். அளவில் தேர்ச் சேனை சூழ’ என்று அமைச்சன் கூறுவதால், குறுக்கே வந்த பசுங்கன்றைச் சூழ இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு