பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சேக்கிழார் தந்த செல்வம் நிறுத்தாதது அவர்கள் குற்றம் என்றும் கூறினான். அடுத்து, அரசு உலாம் தெரு’ என்று கூறியதால், அந்தத் தெருவில் வர உரிமையில்லை என்றும் சமாதானம் கூறினான். அடுத்து, தேர்க்கால் இடைப் புகுந்து இறந்தது என்று அமைச்சன் கூறுவது சிந்திக்க வேண்டியது. சுழலும் சக்கரத்தில் கன்று அகப்பட்டுக் கொள்வதானால் அது சக்கரத்தின் விளிம்பில்தான் (rim) அகப்பட முடியும். ஆனால், இந்தப் பசுங் கன்று, தேர்க்காலின் இடையில் புகுந்தது என்று கூறுவதால் சக்கரத்தில் காணப்படும் நடுப்பகுதிக்கும், வெளி வளையத்திற்கும் இடையே உள்ள செருகுகோல் (spokes) இரண்டிற்கிடையே தலையை விட்டது என்று கூறுகிறான் அமைச்சன். உருளும் சக்கரத்தில் இரண்டு செருகுகோல்களுக்கிடையே எதனையும் நுழைக்க முடியாது. ஆனால், இந்தக் கன்று தேர்க் கால் இடைப்புகுந்து என்றதால், இரண்டு செருகு கோல்களுக்கு இடையே தலையை விட்டது என்று கூறுவதால், நடக்க முடியாத ஒன்று நடந்துவிட்டது என்றும் கூறுகிறான். அதாவது, அது உயிரை விடவேண்டும் என்றே இவ்வாறு செய்தது என்று கூறுவதால், இதில் அரசகுமாரன் தவறு ஒருசிறிதும் இல்லை என்பதை ஈடுஇணையற்ற வழக்கறிஞனாக நின்று அந்த அமைச்சன் கூறி முடிக்கிறான்.