பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 19 இவர் தில்லையில் கொற்றவன் குடியில் ஒரு மடத்தில் தங்கியிருந்தவர். தில்லையில் விழாவின்போது, கொடி மரத்தின் மீது ஏற்றப்பட்ட கொடி, ஏருது பலமுறை விழுந்து விட, தீட்சிதர்கள் இவரிடம் முறையிட, இவர் வந்து கொடிக்கவி பாடிக் கொடியினை ஏற்றுவித்தனர். இறைவரது கட்டளைப்படி இழிகுலத்தவகைக் கருதப் பட்ட பெற்ருன் சாம்பானுக்குச் சிவ தீட்சை செய்து முத்தி சேரத் திருவருள் புரிந்தவர். அங்ங்னமே முள்ளிச் செடிக்கும் தீட்சை புரிந்து முத்தி கொடுத்தவர். இவரது காலத்தைக் கி. பி. 1270 முதல் 1815 வரை என்பர். உமாபதி சிவம் சேக்கிழார்க்குப் பிற்பட்டவர். அங் ங்ணம் இருந்தும், திரு பிள்ளை அவர்கள், இவ்விரு சைவப் புல வர்களையும் ஒன்று படுத்திக் கூறவேண்டும் என்னும் ஆசைப் பெருக்கினல், திகழ் உமாபதி சிவனே குன்றையுற மேவினர் என்று கூறி இன்புறுகிரு.ர். உமாபதி சிவம் முன்னும் பின்னும் என்றும் நிலவும் பெருமைக்குரியவர் என்னும் கருத்துத் தொனிக்கவே 'திகழ் உமாபதி சிவ்ம்' என்று பாடினர். குன்றை என்பது குன்றத்துார் என்பதன் மரூஉ மொழி. இது சென்னைப் பல்லாவரம் இரயில் அடிக்கு நான்கு கல் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து பஸ் வழியாகவும் இதனை அடையலாம். ஏறக்கு ை 14 கல் தொலைவில் உள்ளது. இங்கு இரு சிற்றுார்கள் உள. ஒன்று திரு நாகேச்சரம் என்பது; மற்ருென்று நத்தம் என்பது. திரு நாகேச்சரம் சேக்கிழாரால் தாபனம் செய்யப்பட்ட பதி. இதுபோது நல்வளத்துடன் உள்ளது. இங்கு ஆ ண் டு தோறும், இறைவற்குப் பெருவிழாவும், சேக்கிழார்க்குச் சிறப்பு விழாவும் நடந்து வருகின்றன. செங்குந்தர்கள் இங்கு மிகுதியாக வாழ்கின்றனர். இவ்விடத்திலிருந்து அரை கல் நடந்தால் நத்தத்தை அடையலாம். குன்றத்துார் என்னும் பெயர்க்குரிய காரணத்தை இங்குக் காணலாம். இங்குக் குன்றுகள் உண்டு. ஒரு குன்றில் முருகப் பெருமான் திருக் கோயில் உளது. இங்குச் சில ஆண்டுகளாகப் படிவிழா