பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காப்புப் பருவம் கால் என்பதும், சுந்தரர் வாக்கு முக்கால் அரைக்கால் என் பதும் தெரிய வருகின்றன. இந்த அழகிய கருத்தையே திரு பிள்ளைஅவர்கள், 'ஆரூரர் ஒர் அரைக்கால், நம்பி ஆரூரர் முக்கால் அரைக்காலாக முடிவு செய்து அருள் மாக்கவி' என்று பாடிக் காட்டினர். இந்தத் திருப்பாட்டின் முதல் இரு சீராக உள்ள தில்லை வாழ் அந்தணர் என்னும் தொடரே, காப்புப் பருவ முதல் பாட்டின் தலைப்பாக உள்ளது. இப்பாட்டில் குறிப்பிடப் பட்டவர்கள், தில்லைவாழ் அந்தணர்கள். திருநீலகண்டர், இயற் பகையார், இளேயான் குடிமாறர். மெய்ப்பொருளார், விறல்மிண்டர், அமர் நீதியார் ஆகிய எழுவர். தில்லைவாழ் அந்தணர்கள் என்பார். சிதம்பரத்தில் நடராசப் பெருமானேப் பூசிக்கும் பேறு பெற்றவர்கள். இவர்கள் மூவாயிரவர் என்று கூறப்படுவார்கள். உண்மை யில் இவர்கள் இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பதின்மர்களே. இவர்களுள் நடராசப் பெருமானும் ஒருவராயிருந்தனர். இதனுல் தில்லை மூவா யிரவர் ஆயினர் திருநீலகண்டர் குயவர் மரபினர். சிதம்பரத்தில் வாழ்ந் தவர். சிவனடியார்கட்கு மண் ஒடு அளிக்கும் தொண்டில் ஈடு பட்டவர். இவர் இறைவனது திருநீலகண்டத்தில் பேர் அன்பு கொண்டவர். இக்காரணம் பற்றியே இவர் திருநீலகண்டர் எனப்பட்டார். இவர் இளமை காரணமாகத் தம் மனேவியார் இருக்க, வேற்றுமாதினிடம் சிறிது ஈடுபட்டிருந்தனர். இதனே மாற்ற எண்ணிய இவரது மனேவியார், இவர்க்கு எல்லாப் பணிகளைப் புரிந்தும், உடல் புணர்ச்சி இன்றி இருந்தனர். இந் நிலையில் இவர் அவரைத் தழுவ முயன்றபோது, 'நீர் எம் மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்” என்றனர். திருநீல கண்டர் திடுக்கிட்டு எம்மை எனப் பன்மையில் கூறியதால், "மற்றைய மாதரார் தம்மையும் என்தன் மனத்தினும் தீண் டேன்” என்று உறுதி பூண்டு, பல்லாண்டு வாழ்ந்தனர். இந் நிலையில் இறைவர் ஒர் ஒட்டினை இவர்பால் தந்து, தாம் வேண்