பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காப்புப் பருவம் அளித்து-கொடுத்து, அருள அருள்செய்ய, அளவா-அளவு படாத, மகத்துவம்-பெருமை, அலைமலி-அலைகள் நிறைந்த கடல் கரையில் உள்ள, சுணங்கன்-நாய், பெருக்கத்து-கல்வி, கேள்வி, செல்வம், பட்டம் முதலானவை சிறப்புற்ற காலத் தும், ஆன்ற-அமைந்த, நிறைந்த, பணிவு-தாழ்மை, ஆளிசிங்கமாகிய சேக்கிழாரை, இலை மலி எனும் கவி-கந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையின் இரண்டாவது பாடல், எழு-ஏழு, புவனம்-உலகம், பரசும்-போற்றும். துதிக்கும், ஏத்த-துதிக்க, அமர்வார்-பொருந்தி இருப்பவர், விரும்பப் படுவார், புரவி-குதிரை, வையம் மிசை-தேரில், எழு-வரு கின்ற, கதிரும்-சூரியனும், வட்கும்-தன் ஒளி கெடும், பின் னிடும், மனிஅழகிய, எழு உருவம்-எஃகினல் ஆகிய தூனும், உட்கும்-அஞ்சும், சால்-மிகுந்த, மலேமலி-மலே போன்ற, எழுஏழு, பவம்-பிறவிகள், விறல்-வன்மை, மலர்-அழகிய, அணிஆபரணம். (விளக்கம்) சேக்கிழார், பெரும் புலவர்களால் கைகூப்பி வணங்கத்தக்க பெருமை சான்றவர். சேக்கிழான் அடி சிந்தை இருத்துவாம்' என்பர் மாதவ சிவஞான சுவாமிகள். "சேக்கிழார் அடிபோற்றி” என்பர் கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியார். இவ்விருவர்களும் பெரும் புலவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும். மற்றும் பல புலவர்கள் சேக்கிழாரைக் கைகுவித்து வணங்கியுள்ளனர். ஆகவே, 'கலைமலி பெரும் புலவர் கைகுவிக்க” எனப்பட்டது. சேக்கிழார் இறைவர் தந்த உலகெலாம் என்னும் தொடரை அமைத்து நூலேப் பாடத் தொடங்கியபோது, கலைமகள் அவர்தம் நாவில் இருந்து காண்டு தேர்ந்த சொற் களை எடுத்துக் கொடுத்த வண்ணம் இருந்தனன். இதனை உமாபதி சிவம், பூவை மறந்தனள் வெண்டா மரைமயில் புகல்தரு சங்கப் புலவோர்சொல் பாவை மறந்தனள் தேச சுபாடிதப் பயனை மறந்தனள் பதுமத்தோன்