பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காப்புப் பருவம் பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும் காலாறு கோலிஇசைபாட நீடும் களிமயில் நின் ருடும்இயல் தொண்டை நாட்டுப் நாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் என்று ஏத்தியுள்ளார். எனவே, உலகேத்த என்பது மிகவும் பொருத்தமே. சிதம்பரப் புலியூர்க்கோட்டம் அளவிலாச் சீர் சிறப்புக்களையுடையது. கற்ருங்கெரி ஒம்பிக் கவியை வாராமே செற்ருர் வாழ் தில்லை, செல்வ நெடுமாடம் சென்று சேண் ஒங்கிச்செல்வ மதிதோய் செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ் தில்லை, சிட்டர் வாழ் தில்லை, சீலத்தார் தொழுதேத்தும் சிற் றம்பலம், செம் ைமயாய்த் திகழ்கின்ற சிற்றம்பலம், கற்றவர் தொழுதேத்தும் சிற்றம்பலம், என்று திருஞான சம்பந்தரும், உலகுக் கெல்லாம் திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லை, தேத்தென என்று இசை வண்டுகள் பாடும் சிற்றம்பலம், என்று அப்பர் பெருமாளுரும், அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் என்று சேக்கிழாரும், பகர்வரிய தில்லை மன்றுள் பார்த்தபோது அங்கு என் மார்க்கம் இருக்குதெல்லாம் வெளியே என்ன, எச்சமயவத்தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர்! எனத் தாயுமானவரும் போற்று தல் காண்க. ஆகவே, தில்லைத் புலியூர்க் கோட்டம், ஒங்கு புலியூர்க் கோட்டமே. குன்றத்துாரில் எத்தனையோ பேர்கள் பிறந்தனர்; இறந்தனர். ஆனல், சேக்கிழார் போன்ற பெருமைக்கு உரிய வர் எவரும் இலர். ஆகவே, சேக்கிழார் குன்றத்துாரில் ஒப்பிலாதவராய்த் திகழ்ந்தவர். எனவே, அவரை ஒருத்தரை என்றனர். திருநின்ற செய்யுள் என்பது, திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன் தன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்