பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காப்புப் பருவம் என்று பாடியதோடு இன்றி, அவர் தாம் உய்ந்த நிலையினத் திருநீலக் குடிப் பதிகத்தில், கல்லி ைேடெனப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்களன் வாக்கினல் நெல்லு நீர்வயல் நீலக் குடிஅரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேன் அன்றே என்றும் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் அப்பரைக் கட்டி இருந்த கல் மிதந்து வந்து கரையில் சேர்த்ததைச் செவ்வையாக, பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமல ரோன்முதல் அமரர் வாழ்த்துதற் கரியஅஞ் செழுத்தையும் அரசு போற்றிடக் கருநெடும் கடலினுள் கல்மி தந்ததே என்றும், வாய்ந்தசிர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் என்றும் பாடியுள்ளனர். இன்னேர் அன்ன குறிப்புக்களே 'நீற்றறையுள் * நாவரசர்’ என்னும் அடிகளில்பொருந்தி யிருத்தல் காண்க. திருநாவுக்கரசரது அற்புத நிகழ்ச்சிகளைக் கண்ட அருகந்தர் அவலக் கடலில் ஆழ்ந்தனர். ஆதலின், 'அருகந்தர் சிந்ை வெந்திட' எனப்பட்டது. கடல் அலைகளாலும் நதை 互, | துன்பம் தருதலின் 'செறிதுயர்க் கடல்’ எனப்பட்டது. கல் ஒன்றும் அறியாப் பொருளே ஆயினும் அப்பரைப் பிணித் தற்குத் துணையாய் இருந்தமையின், பாபம் உற்றது. ஆகவே, இது 'மறக்கல்’’ எனப்பட்டது. சேக்கிழார் தம் திரு வாக்கில் ஆணவத்தை 'மலக்கல்' எனச்சுட்டினர். கல் கடலில் மிதத்தல் என்றும் நிகழா நிகழ்ச்சி. இவ்வரியு