பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காப்புப் பருவம் நம்பா நினக்கோலம் முறையோ எனக்கால நஞ்சுண்டு பித்துண்டு நம்தேவர் என்பார் தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த தயவாளர்' என்றும் குமரகுருபர சுவாமிகளும், கருதின்ற கண்டத்தின் அறிகுறியைப் போற்றிப் பரவியுள்ளனர். புறநானுாருகிய சங்க இலக்கியமும் திருநீல கண்டத்தின் மாண்பை, 'கறைமிட றணியலும் அணிந்தன்று அக்கறை மறைநவில் அந்தனர் நுவலவும் படுமே" என்று போற்றுகிறது. இன்னே ரன்ன குறிப்புக்களைக் கொண்டு திகழ்வது 'கரு நின்ற கண்டர் அருள்” என்னும் தொடர். இறைவர் அப்பர் பெருமாளுர்க்கு நஞ்சு அமுதாக் குவித்தும், கொல்லவந்த யானையைக் குனியச் செய்தும் புரிந்த அருள்கள் பல வாதலின், "அருள் வெளி செய்' என அப்பருக்கு அடை கொடுக்கப்பட்டது. அல்லது, அப்பூதி அடிகளாரின் மூத்த திருநாவுக்கரசு பாம்பு கடித்து இறந்தபோது, பதிகம் பாடி உயிர்ப்பித்த அருளே நினைந்து இவ்வாறு சிறப்பிக்கப்பட்டது எனினும் ஆம். அப்பூதியார் திருமகனே எழுப்பிய அருள் நிலையினைச் சேக்கிழார், நாவினுக்கரசர் கேளா நன்றுநீர் புரிந்த வண்ணம் யாவர்.இத் தன்மை செய்வார் என்றுமுன் எழுந்து சென்றே ஆவீதீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார்' என்று பாடியுள்ளார். அல்லது,